அக்னி – 6 ஏவுகணை வரலாறு படைக்க தயார்!

பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது.

இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.

இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் சமீபத்​தில் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், பாஜக தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “அக்​னி-6 – வல்​லரசு பாதையை நோக்கி இந்​தியா முன்​னேறுகிறது. 10,000+ கிமீ தூரம் பாயும் திறன் மற்​றும் எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பத்​துடன், அக்​னி-6 வரலாறு படைக்​கத் தயா​ராக உள்​ளது.

இந்த ஏவு​கணை இந்​தி​யா​வின் பாது​காப்பை எதிரி​கள் ஊடுருவ முடி​யாத​தாக மாற்​றும். அத்​துடன் உலகின் மிக​வும் சக்​தி​வாய்ந்த நாடு​களின் வரிசை​யில் நம்மை நிலைநிறுத்​தும். வலிமை​யான இந்​தி​யா, பாது​காப்​பான இந்​தி​யா” என்று குறிப்​பிட்​டுள்​ளது.

மேலும் பாஜக பதிவேற்​றிய ஒரு காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இது​வரை அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன் ஆகிய 5 நாடு​கள் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை சக்​தி​யைக் கொண்​டுள்​ளன.

இப்​போது, இந்​தியா அதே வரிசை​யில் தனது நிலையை வலுப்​படுத்​தப் போகிறது. அக்​னி-6 இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறை ஏவு​கணை​யாகும். நீண்ட தூரம் சென்று தாக்​கும் திறனுடன், இந்​தி​யா​வின் வலிமை பிராந்​திய அளவில் மட்​டுமல்​லாமல் உலகளா​விய ரீதி​யிலும் விரிவடையப் போகிறது. இங்​கு​தான் அடுத்த பெரிய மாற்​றம் நிகழ்​கிறது. ஒரு ஏவு​கணை, பல இலக்​கு​கள் – அதுவே எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம்.

இது ஒரே நேரத்​தில் பல பணி​களைச் செய்​யக்​கூடியது. அமெரிக்​கா, ரஷ்யா மற்​றும் சீனா போன்ற நாடு​களிடம் மட்​டுமே இருந்த இந்த சக்​தி, இப்​போது இந்​தி​யா​வுக்​கும் கிடைத்​துள்​ளது.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம் என்​பது, ஒரே ஒரு ஏவு​கணை மூலம் வெவ்​வேறு இலக்​கு​களுக்​குப் பல அணு ஆயுதங்​களை அனுப்ப அனு​ம​திக்​கும் ஒரு நுட்​ப​மாகும்.

இது தாக்​குதல் திறனை அதி​கரிப்​பதுடன், எதிரி நாடு​களின் ஏவு​கணை எதிர்ப்​புத் தற்​காப்பு அமைப்​பு​களை முறியடிக்​கவும் உதவுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles