ஹட்டன் நகரில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அனுமதியின்றி கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் அனுமதியற்ற கடைகளை அகற்றிக்கொள்ளுமாறும், நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறும் ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று (16) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்னவின் ஆலோசனைக்கு அமைய, நகர சபையின் விளம்பரப் பிரிவு அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பை நகரப் பகுதிகளில் மேற்கொண்டனர்.
ஹட்டன் பிரதான வீதி, , சக்தி மண்டபப் பகுதி மற்றும் ஹட்டன் பொதுச் சந்தை வளாகம் ஆகிய இடங்களில் அனுமதியற்ற வியாபார நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றிக்கொள்ளுமாறே நகர சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.










