அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளருமான அமரர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (16) காலை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறை, கல்ரோட் வீதி, நெடியகாட்டிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஜீவன் தொண்டமான், அன்னாரின் குடும்பத்தாருடன் கலந்துரையாடியதுடன், அவரின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தியும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

Related Articles

Latest Articles