இஸ்ரேலில் இறந்த அனுலாவின் உடலை அடையாளம் காண DNA சோதனை

இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்காக அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரியின் DNA மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த நபர்களின் DNA மாதிரிகளை இஸ்ரேலுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் அனுலா ரத்நாயக்க கொல்லப்பட்டது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles