இஸ்ரேலுக்கு அடுத்த அடி: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

தெற்கு காசா நகரான ரபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு ஐ.நாவின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவுக்கு இஸ்ரேல் இணங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றபோதிலும், மேற்படி நீதிமன்ற உத்தரவானது இஸ்ரேலுக்கு இராஜதந்திர ரீதியிலும் நெருக்கடியாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக ரபா எல்லை திறக்கப்பட வேண்டும் எனவும்,

காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்எனவும் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களை கைது செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதேபோல அயர்லாந்து உட்பட மூன்று ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்த உதரவும் இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles