ஈரான் ராணுவத்தின் சக்திவாய்ந்த படைப்பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) செயல்படுகிறது. இந்த படைப் பிரிவின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதல்களை நடத்தின.
இதில் ஈரானின் சக்தி வாய்ந்தவர்களில் ஒருவராக இருந்தவரும் ஐஆர்ஜிசி தளபதியுமான முகமது பாக்பூர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் செய்தி நிறுவனமான என்12 தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் இதை உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு இஸ்ரேல், ஈரான் இடையே நடந்த சண்டையில் ஐஆர்ஜிசி தளபதி ஹுசைன் சலாமி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, முகமது பாக்பூருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கியதுடன் ஐஆர்ஜிசி தளபதியாகவும் நியமித்தார். இவர் பொறுப்பேற்றதும் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு கடந்த மாதம் ஈரான் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
