இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்து மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை தங்கள் இராணுவம் கொன்றுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

Related Articles

Latest Articles