இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டம் முன்வைப்பு!

 

 

 

இஸ்​ரேல்​ மற்றும் ஹ​மாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்​குள் புகுந்து தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டனர்.

மேலும், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது.

இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65 ஆயிரத்துக்கு அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது.

ஹமாஸிட​மிருந்து பிணைக் கைதி​களை மீட்டு போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வோம் என்று வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​தார்.

மேலும், ஹமாஸ் பிணைக் கைதி​களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு​வை​வும் அமெரிக்கா விதித்​துள்​ளது. அது​மட்​டுமல்​லாமல் இஸ்​ரேல், பாலஸ்​தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்​தை​யும் அமெரிக்கா தற்​போது அறி​வித்​துள்​ளது.

அமெரிக்கா அறி​வித்​துள்ள 21 அம்​சத் திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
காசா பகுதி தீவிர​வாதம் இல்​லாத, அமை​தி​யான மண்​டல​மாக மாற்​றப்​படும். காசா மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்​து​வதே இதன் முக்​கிய நோக்​கம்.

இரு தரப்​பும் இந்​தத் திட்​டத்தை ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக மோதல்​கள் நிறுத்​தப்​படும்.
இஸ்​ரேல் தனது நடவடிக்​கைகளை நிறுத்​தி, காசா​விலிருந்து படிப்​படி​யாக வெளி​யேறத் தொடங்​கும். பாலஸ்​தீனர்​களை கொண்ட ஒரு குழு​வைக் கொண்டு காசா​வில் இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். அந்த அமைப்பே காசா​வில் அன்​றாட நிர்​வாகத்​தைக் கவனிக்​கும்.

அமெரிக்​கா​வின் தலை​மை​யில் அரபு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களைக் கொண்ட ஒரு புதிய சர்​வ​தேச குழு இதைக் கண்​காணிக்​கும். பாலஸ்​தீனிய ஆணை​யம் தனது சீர்​திருத்​தத் திட்​டத்தை முடிக்​கும் வரை காசா​வின் மறுசீரமைப்​புக்கு நிதி திரட்​டு​வது இக்​குழு​வின் பணியாகும்.

இந்​தத் திட்​டத்​துக்கு இஸ்​ரேல் சம்​மதம் தெரி​வித்த 48 மணி நேரத்​துக்​குள், உயிருடன் உள்ள மற்​றும் இறந்த அனைத்​துப் பிணைக் கைதி​களும் இஸ்​ரேல் வசம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள். போர் உடனடி​யாக நிறுத்​தப்​படும் என்​பன போன்ற அம்​சங்​கள் இந்தப்பட்டியலில் இடம்​பெற்​றுள்​ளன.

அதே​நேரத்​தில் பாலஸ்​தீனத்தை தனி நாடாக அங்​கீகரிக்க ஆஸ்திரேலியா, கனடா, இங்​கிலாந்து உள்​ளிட்ட சில நாடு​கள் முடிவு செய்​துள்​ளன. அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நேதன்​யாகு ஒப்​புக்​கொள்​ள​வில்​லை. இதை நாங்​கள்​ ஒரு​போதும்​ ஏற்​க​மாட்​டோம்​ என்​று அவர்​ அறிவித்​துள்​ளார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles