இ.தொ.கா. உறுப்பினரை தோற்கடித்த மொட்டு கட்சி உறுப்பினர்கள்!

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2ஆவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை – லிந்துலை நகரசபை நேற்று கூடியது. இதன்போது நகரசபையின் பதில் தலைவராக பதவி வகிக்கும் லட்சுமணன் பாரதிதாசனால் திருத்தங்கள் சகிதம் 2ஆவது தடவையாகவும் பாதீடு முன்வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பின்போது 2 மேலதிக வாக்குகளால் அது தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்த நிலையில் அதற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் , ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் மலையக மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர், சுயேட்சைக் குழு 1 மற்றும் 2 ஆகிய குழுக்களின் சார்பில் தலா ஒருவர் வீதம் 6 பேர் எதிராக வாக்களித்து நகரசபை தலைவரினால் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்தனர்.

எனவே இரு தடவைகள் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது சபையின் தலைவராக பணியாற்றி வரும் உப தலைவர் பதவி வெற்றிடமாகிவிட்டதால் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் செயலாளர் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் அனுமதியோடு ஒருமாத காலத்தினுள் நகர சபை உப தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடாத்த வேண்டுமென சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles