எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடுமென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். தெல்லிப்பளை சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே, டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா,இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று நிச்சயம் பாராளுமன்றம் செல்வேன் என்றார்.
தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி, இணைந்து செயற்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.