ஈரானுக்கான கடனை அடைக்க கைகொடுத்த ‘தேயிலை’!

இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் அலிரெஸா பேமன்பெக் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

2016ஆம் ஆண்டளவில், ஈரானின் சந்தையில் 47 சதவீதமாக காணப்பட்ட இலங்கையின் தேயிலைத்துறை, 2020ஆம் ஆண்டில் 25 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கொடுப்பனவுகள் மற்றும் ஈரான் ரியாலின் பெறுமதி வீழ்ச்சி என்பன இதற்கான காரணமாகுமென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளதன் மூலம், இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்குமென பெருந்தோட்டத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால், ஈரானின் தேசிய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய, 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பதற்கும் இந்த உடன்படிக்கை மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles