ஈரான் ஜனாதிபதியின் ஆத்ம சாந்திக்காக தலவாக்கலையில் பிரார்த்தனை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் தலவாக்கலை வாழ் முஸ்லிம் மதத்தவர்களால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முகமட் காதர் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பொதுமக்கள் நுவரெலியா மாவட்ட பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Articles

Latest Articles