போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானில் தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
2 வது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை அரசு சார்ந்த 135 பேர் உள்பட சுமார் 2,400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 10,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரானில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால், கள நிலவரத்தை அறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால் “மிகவும் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் தலைமையும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.










