உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்றுள்ளதை நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இறங்கியுள்ளார்.
அவருக்கும், உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்று மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலையடுத்து உக்ரைன் வான் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியால் 20 அம்ச அமைதித் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி, பின்னர் இணக்கம் தெரிவித்தார்.
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இது பற்றியே அமெரிக்க ஜனாதிபதியுடன், உக்ரைன் ஜனாதிபதி நாளை பேசுவதற்கு திட்டமிட்டிருந்தார்.










