கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டிருந்த கரட் விலை, இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலை பட்டியலுக்கமைய ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்துடன் ஒரு கிலோ கோவாவின் மொத்த விற்பனை விலை 520 ரூபாவாகவும், லீக்ஸ் ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 360 ரூபாவாகவும், ராபு ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 170 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2 ஆயிரம் ரூபாவரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

