உயர்தரப்பரீட்சை மீளாய்வு பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.  தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்ததாகவும், அவர்களது பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles