ஆசிரியர்களின் தியாக உணர்வு – மாணவர்களின் விடா முயற்சி! அயரி த.ம.வி. மாணவர்கள் சிறந்த பெறுபேறு

சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தொடங்கும் மாணவர்களிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி எங்க டியூசன் போறீங்களா? இந்த வினாவை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மத்திய மாகாண, கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பெறுபேறுகள் அமைந்துள்ளன.

அயரி பாடசாலை மாணவர்கள், எந்தவிதமான வெளி டியூசன் வகுப்புகளுக்கோ எதிர்பார்கை வினாக்கள் விற்பனை செய்யப்படும் மாபெரும் இறுதி கருத்தரங்குகளுக்கோ சென்றதில்லை.

சனி, ஞாயிறு கிழமைகளில், விடுமுறை நாட்களில், போயா தினங்களில் எவ்வித போக்குவரத்தும் உரிய நேரத்திற்கு இல்லை.

பாடசாலை நாட்களில் 2.00 மணிக்கு பின் போக்குவரத்து வசதி இல்லை. வருடத்தில் பாதி காலம் மழையும் காற்றும் குளிரும்,

நிலைமை இவ்வாறிருக்க மிக மிக தியாக உணர்வோடு தினமும் 500/- ரூபாய்க்கு மேல் போக்கு வரத்துக்காக செலவு செய்து கொண்டு பணியாற்றும் ஆசிரியர்களின் உயர்வான உணர்வான உழைப்பின் வெளிப்பாடும் மாணவர்களின் முயற்சியாலும் இவ்வருடம் வெளிவந்துள்ள உ.த பெறுபேற்றில் சாதனை படைத்துள்ள அயரி தமிழ் மகா வித்தியாலயம்.

Related Articles

Latest Articles