உயர்மட்ட குழுவுடன் தென்கொரிய சபாநாயகர் இலங்கை பயணம் (படங்கள்)

தென் கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சூக் (Park Byeong-seug) உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழு 04 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (19) நாட்டை வந்தடைந்துள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தென் கொரிய சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளை தென் கொரிய சபாநாயகர் சந்திக்கவுள்ளார்.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்துக்கும் தென் கொரிய சபாநாயகர் விஜயம் செய்யவுள்ளார்.

Related Articles

Latest Articles