உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை கோருகிறார் சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கண்டறிய வெளிநாட்டு ஆலோசனை தேவையா? அதனை செய்யுமாறு வெளிநாட்டு ஊடகம்தான் வலியுறுத்த வேண்டுமா? அதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு இல்லையா?

எமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இல்லையா? உண்மைகளை கண்டறியவும், உண்மையை பேசவும் எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு பொறுப்பில்லையா?.

பேராயர் கர்தினால் எனக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியதற்கு நான் கவலைப்படவில்லை. அவர் தமது மனதுக்குள் இருந்த கவலை காரணமாக அவ்வாறு கூறியிருந்தால் நான் அதற்காக கவலைப்பட போவதில்லை.

கிறிஸ்தவ மக்களுக்கு இந்த கவலை இன்னமும் உள்ளது. எமது நாட்டின் உள்ளக விசாரணைகளின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய முடியாது. இதற்கு சர்வதேச விசாணையொன்று அவசியமாகும்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles