உலகம் முழுவதும் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக எதிர்வரும் காலத்தில் மேலும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஊசிகளை பயன்படுத்துவதன் காரணமாக பில்லியன் கணக்கில் பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.
இந்த வருட இறுதிக்குள் முழுமைப்படுத்த வேண்டிய தடுப்பூசி வழங்கும் இலக்கு தொடர்பில் இன்னும் உறுதியற்ற நிலைமை காணப்படுகிறது.
ஆபிரிக்க நாடுகளில் 5 நாடுகள் மாத்திரமே தமது சனத் தொகையில் 40 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்கும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
இதன் காரணமாக ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதனால், மருந்து ஊசிகளை தயாரிக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் மட்ஷிடிசோ மோயேட் (Matshidiso Moide) தெரிவித்துள்ளார்.
உலகமும் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க தற்போது 6.8 பில்லியன் ஊசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.