உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

 

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது.

இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை இப்​பகு​தி​யைக் கடக்க 2 மணி நேரம் எடுத்​துக்​கொண்ட நிலை​யில் தற்​போது பாலத்​தின் உதவி​யால் இரண்டே நிமிடத்​தில் இப்​பகு​தி​யைக் கடந்து விட முடி​யும்.

இதற்கு முன்பு பெய்​பான்​ஜி​யாங் பகு​தி​யில் தரைமட்​டத்​திலிருந்து 565 மீட்​டர் உயரத்​தில் கட்​டப்​பட்டு இருந்த பாலமே உலகின் மிக உயர​மான பால​மாக இருந்​தது. தற்​போது இந்த ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் 625 மீட்​டர் உயரத்​தில் அமைக்​கப்​பட்டு அந்த சாதனை முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. 2,900 மீட்​டர் நீளம் கொண்​ட​ இந்​தப் பாலம் 3 ஆண்​டு​களில் கட்டி முடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து குய்சோ மாகாண போக்​கு​வரத்து முதலீட்டு குழு​மத்​தின் திட்ட மேலா​ளர் வூ ஜாவோமிங் கூறும்​போது, “625 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்ள இந்​தப் பாலம் பொறி​யியலின் அற்​புத​மாக திகழ்​கிறது.

இந்​தப் பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க வசதி​யாக 207 மீட்​டர் உயரத்​தில் லிப்ட் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் பாலத்​தையொட்டி உணவகங்​கள், பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க பிளாட்​பாரங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இது மிக விரை​வில்​ பிரபல​மான சுற்​றுலாத்​ தல​மாக ​மாறி சுற்​றுலாப்​ பயணி​களை வெகு​வாக ஈர்​க்​கும்​’’ என்​றார்​.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles