நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்றும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
நன்கொடையாளரின் முகத்தின் ஒரு பகுதியையும், முழு இடது கண்ணையும் அகற்றி, அவற்றை பெறுநருக்கு அறுவை சிகிச்சை மூலம் சேர்க்கப்பட்டது.
46 வயதான ஆரோன் ஜேம்ஸ், என்பவர் அமெரிக்காவின் இராணுவத்தில் பணிபுரிந்தவர். அவரது இடது கண், இடது முழங்கைக்கு மேல் பகுதி, மூக்கு, உதடுகள், முன் பற்கள், இடது கன்னத்தின் எலும்பு உட்பட பல பகுதிகள், ஒரு மின் விபத்தில் பாதிக்கப்பட்டது. முழுக் கண்ணையும் மாற்றுவது நீண்ட காலமாக மருத்துவ அறிவியலின் ஒரு சவாலாக இருந்துள்ளது. இப்படி ஓர் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இதற்கு முன் உயிருள்ள ஒருவருக்கும் செய்யப்படவில்லை.
இந்த அறுவைச் சிகிச்சை முடிய 21 மணி நேரம் ஆனதாக கூறப்பட்டுள்ளது.