உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  5  அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது.

எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இன்னும் சில நாட்களில் விலை உயரலாம் என்றும் செட்டியார்தெரு தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

செட்டியார் தெருவில் ஒரு பவுன் 24 கரட் தங்கம் 106,000 ரூபா முதல் 108,000  ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ள போதிலும், உள்ளூர் தங்கத்தின் விலையைக் குறைக்கக்கூடிய நிலைமை ஏற்படவில்லை என செட்டியார்தெரு தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles