உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்துக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

பரா ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ள தினேஸ் பிரியந்த ஹேரத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றிய தினேஸ் பிரியந்த ஹேரத், 67.79 மீற்றர் ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தையும் வென்று சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கௌரவத்தையும்; பெருமையையும் தேடிக்கொடுத்துள்ளார்.

தங்கப்பதக்கத்தை வென்ற சாதனை நாயகனை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன் என்றும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles