உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.

நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதினார்.

இதில் கருப்பு நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 62-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இதன் மூலம் நடப்பு சாம்பியனை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 18 வயதான பிரக்ஞானந்தா.

இதற்கு முன்னர் இந்த சாதனையை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நிகழ்த்தியிருந்தார். டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)லைவ் ரேட்டிங்கில் 2 இடங்கள் முன்னேறியதுடன் 2748.3 புள்ளிகளுடன் இரு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேவேளையில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளுடன் ஒருஇடம் பின்தங்கி 12-வது இடத்தில் உள்ளார்.

Related Articles

Latest Articles