எதிர்வரும் டெஸ்ட் தொடர்களின் முடிவுகள் அடிப்படையில் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை அணி முதலில் நியூசிலாந்துக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் 2–0 என வெற்றியீட்ட வேண்டும். தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தனது கடைசி போட்டிகளில் குறைந்தது ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைய வேண்டும்.
2021–23 உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தரவரிசையில் இலங்கை அணி தற்போது 64 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் 108 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்திலும் 72 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றன.
இதில் இந்தியா 4ஆவது இடத்தில் இருப்பதோடு நியூசிலாந்து எட்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இலங்கை அணி வரும் 2023 மார்ச் மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி 2023 ஜூன் மாதம் லண்டன், ஓவலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










