உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் வியூகத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில்

தேர்தல் முறைமை திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று கையெழுத்திட்டன.

நாடாளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இதற்கான நிகழ்வு இடம்பெற்றன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி,43 ஆம் படையணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிவிதுரு ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய, இலங்கை சமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவ லங்கா நிதஹஸ் பக்ஷய, தமிழ் முற்போக்குக் கூட்டணி, விஜயதரணி தேசிய சபை, முன்னிலை சோஷலிஸக் கட்சி, உத்தர சபா உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் ஜயவர்தனபுரவில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகோபித்த தீர்மானத்தின் படி இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் கடுமையாக எதிர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, அந்த முடிவின் பிரகாரம், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக அறிக்கையில் கையொழுத்திடப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles