ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது – என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால் அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை. அதேபோல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடம் இல்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.
உள்ளாட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால்சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.










