ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது-செயான் சேமசிங்க

ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் ஊடாக, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்களின் நலன் கருதியும், அரச சேவையை இலகுப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. டிஜிட்டல் மயமாக்கல் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

எனினும், இந்தச் சட்டமூலம் தொடர்பில் எதிரணியினர் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எனவும் கூறுகின்றனர்.

ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles