ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? இன்று வெளியான அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்பது தொடர்பில் கொவிட் – 19 ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாட்டில் தற்போது உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது தளர்த்தப்படும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும். மாற்றம் இருப்பின் அது குறித்து அறிவிக்கப்படும். தனிமைப்படுத்தல் ஊரடங்கால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.” -என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles