ஊரடங்கை நீடிக்குமாறு வலியுறுத்து! நாளை இறுதி முடிவு!!

நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம் எனவும் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் பிறகும் நீடிப்பது தொடர்பில் நாளை வெள்ளிக்கிமையே தீர்மானம் எடுக்கப்படும் – என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன  தெரிவித்தார்.

 “ ஜனாதிபதி செயலணி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதன்போது தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு நிலைமை மீளாய்வு செய்யப்படும். அதன்பின்னரே ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, தளர்த்துவதா என்று முடிவெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles