ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம் “சமூக மாற்றத்திற்கான கலை, இலக்கிய, கலாசார மற்றும் தொழிற்சங்க முயற்சிகள்: நேற்று : இன்று: நாளை” என்ற தலைப்பில் ஊவா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.
ஆய்வரங்கத்தை ஊவா மாகாண கலாசார அமைச்சு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் என்பன இணைந்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆய்வரங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தலைப்புகளை முன்னிறுத்தியதான ஆய்வு கட்டுரைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள், சுயாதீன ஆள்வார்கள், பட்டப்படிப்பிற்காக குறித்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆய்வில் ஆர்வமுடைய ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
முழுமையான ஆய்வுக் கட்டுரைகளை tamilsahi2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை 0771898978 என்ற கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
பசறை நிருபர்
