மலையகத்தில் மாற்றத்தையும் – மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய அத்தனை தலைமைத்துவ பண்புகளும் ஜீவன் தொண்டமானிடம் இருக்கின்றன என்றும், எனவே, அவரின் வீறுகொண்ட அரசியல் பயணத்துக்கு மலையக மக்கள் முழு ஆதரவையும் வழங்கவேண்டும் என்றும் மலையக வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அறிவிப்புகளானவை, எதிர்கால மலையகம் சிறப்பாகவும், வளம்மிக்கதாகவும் இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் வேங்கைவேகத்தில் ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு எட்டுதிக்கிலும் பேராதாவு பெருகிவருகின்றது. இந்நிலையில் மலையகத்திலுள்ள பல வர்த்தக அமைப்புகள் அவருடன் கைகோர்த்துள்ளன. குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களும் தமது பூரண ஆதரவை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.
எதற்காக ஜீவனுக்கு இந்த ஆதரவு என்பதை தெளிவுபடுத்திய வர்த்தகர்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு,
” மலையக சமுகம் தொடர்ந்தும் பின்னடையாக இருப்பதற்கான காரணங்களை ஜீவன் தொண்டமான் அடையாளம் கண்டுள்ளார் என்பதை அவரின் உரைகள் உணர்த்துகின்றன. அத்துடன், அத்தடைகளை எவ்வாறு தகர்க்கலாம் என்பதற்கான திட்டங்களையும், யோசனைகளையும் அவர் முன்வைத்துவருகின்றார். ஆக, அவரது அரசியல் பயணத்தில் தூரநோக்கு சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும் இருப்பதை காணமுடிகின்றது.
அதுமட்டுமல்ல மலையகத்துக்கு எவ்வாறானதொரு தலைமைத்துவம் வேண்டுமோ – அதற்கேற்ற வகையில் தன்னை செலுக்கும் பொறுப்பு என் சொந்தங்களான மலையக மக்களுக்கு இருப்பதாக ஜீவன் அறிவித்துள்ளமை, காங்கிரசுக்கும், மக்களுக்குமிடையில் உள்ள நெருக்கமான உறவை பிரதிபலிக்கின்றது என்பதுடன், தான் மக்களுக்கான அரசியலையே நடத்தப்போகின்றேன் என்ற உத்தரவாதத்தையும் ஜீவன் இதன்மூலம் வழங்கியுள்ளார்.
இப்படியான வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆகவே, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியம், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரம் ஆகியவற்றுடன் புத்தாக்க சிந்தனைகளையும் உள்வாங்கி, புதுயுகம் நோக்கி மலையக சமுகத்தை ஜீவன் தொண்டமான் அழைத்துசெல்வார் என்பதை அவரின் செயற்பாடுகள் உறுதிப்படுத்திவிட்டன. இதன்காரணமாகவே மாற்றத்தின் பங்காளிகளாக நாமும் இணைந்துள்ளோம்.
தற்போது தபால்மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்திலுள்ள பல அரச ஊழியர்கள் இ.தொ.கா. வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடும்போது இந்த விடயம் தெரியவந்தது. இனிவரும் நாட்களிலும் அரச ஊழியர்கள் பேராதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.










