எதிரணிக்கு வழங்கப்படுமா தலைமைப்பதவி? கோப், கோபா குழுக்களின் கூட்டம் இன்று

‘கோப் ‘ எனப்படுகின்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் ‘கோபா’ எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அமர்வின்போது இவ்விரு குழுக்களுக்கும் புதிய தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்ட வேண்டும்.

தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என எதிரணிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மொட்டு கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles