“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் , எமது ஆட்சியின்போது அது தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்க நேரிடும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.










