பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 12,047 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 42,429 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 9,131 பேரும், பதுளை மாவட்டத்தில் 25,413 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் 37,512 பேரும், இரத்தினபுரியில்1,374 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாகக் குறைவடைந்துள்ளது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ மையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைக் போக்கும் வகையில், 36 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குப் குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
இதன்படி, 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.










