” வடிவேல் சுரேஷ் இனி எம்மைவிட்டு வேறு எங்கும் செல்லமாட்டார். மலையகத்துக்கு தலைமை தாங்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பசறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் எமது கட்சி சின்னமான தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதன் பின்னர் எமது வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கவும். மூன்று விருப்பு வாக்குகளை வழங்கலாம். அதில் ஒன்றை கட்டாயம் வடிவேல் சுரேசுக்கு வழங்கவும்.
மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய திறமை மிக்கதொரு நபராகவே அவர் இருந்து வருகின்றார். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கென தமது உயிரையும் துச்சமாக நினைத்து செயல்படுபவராவார்.
அவர் இனிமேல் எம்மிடமிருந்து விலகிச்செல்லமாட்டார். தொடர்ந்தும் எம்முடனே இருப்பார். அத்துடன் மலையக மக்களுக்கு தலைமை தாங்கக் கூடிய வரும் அவரேயாகும்.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை
