எமது பயணம் தொடரும்: அரசின் ஒடுக்கு முறையை எதிர்கொள்ள தயார்!

” அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க தயார். எமது அரசியல் பயணத்தை நிறுத்தப்போவதில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளிப்படையான அரசியலையே முன்னெடுக்கின்றது. எமக்கு எந்தவொரு தரப்புடனும் டீல் கிடையாது. நாம் தனிநபர்களுடன் பேச்சு நடத்தமாட்டோம். கட்சிகளுடன்தான் எமக்கு கொடுக்கல், வாங்கல் உள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒடுக்கி தமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க அரசாங்கம் முற்படுமானால் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார். இந்நாட்டில் எமது அரசியல் பயணம் தொடரும்.

ஐக்கிய தேசியக் கட்சியால் அடக்குமுறைக்கு உள்ளான கட்சிதான் ஜே.வி.பி. எனவே, அடக்குமுறையின் தாக்கம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்பன பற்றி தற்போதைய அரசாங்கத்துக்கு நன்கு தெரியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles