நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது எனவும், எம்.பிக்களுக்கு வாகன பேமிட் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
‘ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் குழுவைப் பராமரிக்கவும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை மீளப்பெறுவதும் அரசாங்கத்தின் கொள்கை.
எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் எம்.பிக்களுக்கு வாகன இறக்குமதி இடம்பெறாது.” – எனவும் அவர் கூறினார்.