எம்.பி.க்களுக்கான விமான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன-இலங்கை விமானப்படை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

எனினும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை தெரிவித்தார்.

பிரதானமாக  நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டும் அதனுடன் இணைந்ததாக  கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன்  துஷான் விஜேசிங்க குறிப்பிட்டார்.

அதன்படி, இனிமேல்  அத்தியாவசிய தேவைக்காக மட்டும் , பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டும்  விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க,  அமைச்சகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விமான வசதிகள் மட்டுமன்றி,  வான்வழி கண்காணிப்பு கடமைகள் மற்றும் விமானி பயிற்சி நடவடிக்கைகளைக் கூட இனி மேல் கூட்டாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles