மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யாவிடம் வழங்கிவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவேன்.
மாகாணசபைகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். வடக்க, கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது. மாகாணசபையில் என்னை வெற்றிபெற வைப்பது மக்கள் கையில்தான் உள்ளது.” -எனவும் வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார்.










