நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நாளைய தினமளவில் நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கோரிக்கையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.