சிபேட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டரின் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாகும். ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
அத்துடன், மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பஸ்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பஸ் உரிமையாளர் சங்கம் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை.
அத்துடன், சீன எரிபொருள் நிறுவனத்தின் விலைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லங்கா ஐஒசி நிறுவனத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.










