‘எரிபொருள் விலை உயரும்’ – அமைச்சர் கம்மன்பில தகவல்

நிதி அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கும் விலைச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாவாலும் டீசலை 25 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles