நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 368 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 09 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 377 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

