எல்லை தாண்டும் மீனவர்கள் – கைது வேட்டை தொடரும்

” இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” – என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

” வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. எனவே, எமது கடல் வளத்தை பாதுகாக்க கடற்படையுடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலென்பது இன்று நேற்று நடைபெறும் விடயமல்ல, நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றது. இதனை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் தேவையான நடவடிக்கை எடுத்துவருகின்றனர். நேற்றுகூட அத்துமீறிய 12 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நடவடிக்கை தொடரும்.” – எனவும் அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்தார்.

அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles