மோட்டார் சைக்கிள் விபத்தில் , இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் படுகாயம் அடைந்து தெம்மோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய சிறிபாதயை பார்வையிட சென்ற 34 வயதுடைய பெண், மோட்டார் சைக்கிளில் சென்ற போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இங்கிலாந்து நாட்டு பெண் தெம்மோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்