‘எவனென்று நினைத்தாய்’

மாஸ்டர் படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இன்னும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் தற்போதைக்கு இந்த கூட்டணி இணைய வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.

இதனால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்.

கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles