எஸ்.ரி.எப். வேட்டையில் 8 பேர் மாட்டினர்!

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 242.25 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அத்துடன் 568 லீற்றர் கோடா, ஒரு ஓட்டோ, ஒரு செப்புத் தகடு, 5 இரும்பு பீப்பாய் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கதிர்காமம் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 75 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மனன்துரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த மணலை டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இருவரை டிப்பர் ரக வாகனத்துடன் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து தங்கொட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தங்கொட்டுவ, லுனுவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23, 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒன்றறை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வத்தளைப் பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles