நாட்டில் ஏன் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதா அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகின்றாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர்,
” பிங்கியவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரும்வழியில் 21 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 சாவடிகளில் எனது வாகனம் நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு வந்தும், சோதனையால்தான் தாமதம் ஏற்பட்டது.
எதற்காக திடீர் பாதுகாப்பு? நாடாளுமன்றம்மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதா அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிராறா? என்னால் அல்ல, அமைச்சர் சரத்வீரசேகரவால்தான் எனக்கு தாமதம் ஏற்பட்டது. எனவே, கேள்வி எழுப்ப வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.
எனினும், அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. பதிலகள் சபையில் முன்வைக்கப்பட்டன.
